Wednesday, January 26, 2011

அதிகமில்லை அறிந்துகொள்ள...

கதைகள் எனக்கு காத தூரம்
நகைச்சுவைகள் ரசிப்பேன்
கட்டுரைகள் என்றால்  கஷ்டப்படுவேன்..
கவிதை என்றால் எனக்கு உயிர்..
அரசியலில் ஆர்வமில்லை...
ரத்தம் பார்த்தால் சித்தம் மறப்பேன்
கொபமெனக்கு கூடவே பிறந்தது..
சிரித்துப் பேசி பழக்கமில்லை..
படிப்பிற்கும் எனக்கும் பாதாள தூரம்..
வாதாடி பழக்கமில்லை
வாழ்க்கையில் எந்த பிடிப்புமில்லை..
பிறர் நலம் கேட்டறிவேன்
எந்நலம் பற்றி கவலையில்லை..
பகிர்ந்துண்ணும் பழக்கமுண்டு
மனப்பாரங்கள் பகிர்வதில்லை..
புகைப்படலங்களில் முகம் புதைப்பேன்
புகைப்படங்கள் மீது பைத்தியமெனக்கு..
கண்ணால் காண்பவற்றை கருவியில் சிறை பிடிப்பேன்
என் சிறைக்கைதிகளை உங்களில் பார்வைக்கும் வைப்பேன்...

6 comments:

பிம்பம். said...

பரிசோதனைக்காக..

RVS said...

இது கவிதையா... அல்லது கட்டுரையா... அதாவது உயிரா அல்லது கஷ்டப்பட்டீர்களா...
ஆனால் ரசிக்கும்படி இருக்கிறது..

பிம்பம். said...

முதல் வருகை... வருகைக்கு மிக்க நன்றி... நீங்கள் கேட்ப்பது எனக்கு புரியவில்லை... அது எதோ தோன்றியதை எழுதியது தான்...

அடிக்கடி இங்கு வந்து செல்லுங்கள்..

மாணவன் said...

அருமையான தொடக்கம் நண்பரே பதிவுலகத்திற்கு தங்களின் வருகை இனிதாகுக...

தொடர்ந்து சிறக்கட்டும் உங்களின் வலைப்பணி...

வாழ்த்துக்கள்

மாணவன் said...

இனிய குடியரசுதின நல்வாழ்த்துக்கள்....

பிம்பம். said...

வருகைக்கு நன்றி மாணவரே..

Post a Comment